Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label SCHOOL. Show all posts
Showing posts with label SCHOOL. Show all posts

Sunday, 12 June 2016

பள்ளிக்கூட பாடப்புத்தகங்களை இணையதளம் மூலம்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

2016–17–ம் கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள்மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து வினியோகிக்கின்றன.

மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016–17–ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12–ம் வகுப்புவரையிலான பாடநூல்களை www.textbookcorp.inஎன்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

Monday, 9 November 2015

மழை காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை

  1. நாமக்கல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. அரியலூரில் பள்ளி விடுமுறை
  6. திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
  9. கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
  10. திருவள்ளூரில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. காஞ்சிபுரத்தில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Saturday, 3 October 2015

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு

உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

Friday, 24 July 2015

அரசு பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள் சேர்க்கை

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு கல்வியாண்டில் மதுரையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் 648 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 207 நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு தொடக்கப்பள்ளி, 8 நகராட்சி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை காட்டிலும் 1,834 பேர் வரை குறைந்துள்ளது.

தமிழகத்தின் கல்விப் பசிக்கு ஒரு தேசிய திறந்தநிலைப் பள்ளி

பள்ளியில் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திறந்தவெளிப் பள்ளியாக இது நடத்தப்படுகிறது.
எதுவும் படிக்காதவர்களும் பள்ளிப் படிப்பை இதில் படிக்கலாம். இந்தப் படிப்புமுறையில் இரண்டு கட்டங்கள் உள்ளன. மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு இணையானதாக முதல் கட்டம் உள்ளது. இது அடிப்படைக் கல்வி எனப்படுகிறது. அடுத்ததாக, 10- ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான வகுப்புகள் உள்ளன. இவற்றில் தொழில்முறைப் படிப்புகளும் உள்ளன.
இந்த வகுப்புகளுக்குத் தேர்வு நடத்தித் தரப்படுகிற சான்றிதழ்கள் மாநில அரசுகள் அளிக்கிற அதே வகுப்பு பள்ளிச் சான்றிதழ்களுக்கு இணையானவை.

ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தருவார்!

மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை,பள்ளிகள் மூலமே வாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில், 6ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ் கேட்கப்படுகின்றன.

Thursday, 23 July 2015

ஆசிரியர்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சியளித்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை

பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிகளில் பாதுகாப்பற்ற, ஆபத்தான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளது.

Wednesday, 22 July 2015

அரசுப் பள்ளி மாணவர்கள் 31,000 பேருக்கு ஆங்கிலப் பயிற்சி

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதற்காக "கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனத்துடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மகிழ்ச்சியுடன் படித்தல் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சியை அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அதன்படி, இந்தப் பள்ளிகளில் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும் என கரடி பாத் கல்வி நிறுவன இயக்குநர் சி.பி.விஸ்வநாத் கூறினார்.

நூலகங்களுக்கு நூல்களை தேர்வு செய்ய புதிய குழு: பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க புதிய தேர்வுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கீட்டுக்கான நூல்கள் விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்ட நூல கங்கள் உட்பட 4,024 நூலகங்கள் உள்ளன. இவற்றுக்கு மாவட்ட நூலக ஆணைக்குழு நிதி மற்றும் ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக் கட்டளை நிதியின்கீழ் நூல்கள் வாங்கப்படுகின்றன. நூலகங்க ளுக்கு வாங்குவதற்கான நூல் களை தேர்வு செய்ய பொது நூலகத் துறை இயக்குநரை தலைவராகக் கொண்டு 16 பேர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது. இக்குழு பதிப்பாளர் மற்றும் விற்பனை யாளர்களிடம் இருந்து பெறும் மாதிரி நூல்களை ஆய்வு செய்து பரிந்துரைக்கும். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அமைக் கப்பட்ட தேர்வுக் குழுவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதியுடன் முடிந்தது. அதன்பிறகு ஓராண்டாகியும் புதிய குழு அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப் பட்டும் நூலகங்களுக்கான நூல்கள் தேர்வு செய்யப்படவில்லை.

Tuesday, 21 July 2015

RMSA: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த பி.ஏ. நரேஷ், பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநராக (இடைநிலைக் கல்வி) மாற்றப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த குமார், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவர் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.

Sunday, 5 July 2015

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத:சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக மாநில இளைஞரணி செயலர் வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், ஐ.சி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி செயல்படும் பள்ளிகளில் இந்த சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை.

Saturday, 4 July 2015

ஏழைகளுக்கான 25 சதவீத ஒதுக்கீடு: தனியார் பள்ளி காலியிட விவரங்கள் வெளியீடு

தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை அறிமுக வகுப்புகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தப் பிரிவின் கீழ் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Thursday, 11 June 2015

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த உத்தரவு

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் செயல்பாட்டில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், அரசு பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி செயல்பாட்டில் உள்ள சிரமங்களை போக்க உதவ வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட்டாரத்தில், ஒரு அரசு துவக்க அல்லது நடுநிலைப் பள்ளியை, தொடர்ந்து ஒரு பருவம் முழுவதும், மாதந்தோறும் பார்வையிட வேண்டும்; பள்ளி தரத்தை முன்னேற்றும் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும்.
இந்த பணியை முழுமையாக செயல்படுத்த, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பயிற்சி நிறுவன முதல்வர்களும், வட்டாரத்தில் ஒரு பள்ளியை தேர்வு செய்து, இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tuesday, 9 June 2015

ரூ.281 கோடி மதிப்புள்ள பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட ரூ.281 கோடி மதிப்புள்ள பள்ளிக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை அன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடத்தை  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்கள்.
மேலும், தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் 278 கோடியே 82 லட்சத்து  72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிகள்,  பள்ளிக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், கிளை நூலகங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்கள்.

Wednesday, 3 June 2015

பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: கல்வித்துறை

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு செல்போன் கொண்டு வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சேர்க்கை நடைபெறும் போது தனியார் பள்ளி நிர்வாகம் சேர்க்கைக்கான முன்பணம் அதிகமாக வசூலித்து வருவதாகவும், இதை சிலர் வீடியோ எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அதிகமாக முன்பணம் மாணவர்களிடம் வசூலித்தால் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளி நிர்வாகம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடம் செல்போன் தருவதை பெற்றோர்கள் அறவே தவிர்க்க வேண்டும்.  மீறி பள்ளி வாளகத்திற்குள் செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Sunday, 31 May 2015

ஏழை மாணவர்களுக்கான 25% சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
 வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஏலகிரிமலையில் இரு நாள் கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது.
 இந்த விழாவில் அணைக்கட்டு எம்எல்ஏ ம.கலையரசு பேசுகையில், தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் தலைசிறந்த தனியார் கல்வி நிறுவனங்களிலும் பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்குவதில்லை. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கட்டாயமாக நடவடிக்கை எடுப்பார் என்றார்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க உத்தரவு!

அரசு பள்ளிகளில், ஏற்கனவே துவக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி, தட்டு தடுமாறி தவிக்கிறது. வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குனரின் உத்தரவு, ஆசிரியர்களை தவிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. ஆங்கிலவழிக் கல்வி நடத்தும், பிரைமரி, நர்சரிகளுக்கு செல்லும் குழந்தைகளை கவரும் வகையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்வி துவக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது. இரு ஆண்டுகளாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பலவற்றில் ஆங்கிலவழிக் கல்வியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனாலும், அதற்கென தனியாக ஆசிரியர்களோ, பிரத்யேக, ஏ.பி.எல்., அட்டைகளோ வழங்கப்படவில்லை.

Friday, 29 May 2015

DSE: வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

கோடை விடுமுறை முடிவடைந்து வகுப்புகள் ஜூன் 1-ம் தேதி திறக் கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக் குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:
* பள்ளி தொடங்கும் நாள் அன்றே அனைத்து விலையில்லா பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். முதல் நாளிலே ஆசிரியர்களுக்கான கால அட்ட வணை கொடுத்திருக்க வேண்டும்.
* ஆசிரியர்கள் வகுப்பு தொடங்கு வதற்கு முன்னதாகவே வந்திருந்து மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். காலதாமதமாக வரு வதை முற்றிலும் தவிர்க்க வேண் டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மைதான வசதி சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் ஆசி ரியர்கள் வகுப்பறையில் செல் போன் பயன்படுத்தக் கூடாது. தலைமை ஆசிரியர்கள் இதை கண்காணிக்க வேண்டும்.
* ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு ஒழுக்கம், நற்பண்புகள் உள்ளிட்ட நல்ல கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்.
* 6 முதல் 8-ம்வகுப்பு வரை யுள்ள மாணவர்களுக்கு தினமும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
* மாணவர் சேர்க்கையை அதி கரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், பள்ளிகளில் ஆங்கிலப்பிரிவுகள் தொடங்கலாம். மாணவர்களின் வருகையை ஆசிரியர்கல் தினமும் கண்காணிக்க வேண்டும்.
* மாணவர்களுக்கு வழங்கப் படும் சத்துணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Wednesday, 27 May 2015

கொளுத்தும் வெயில்: பள்ளித் திறப்பை தள்ளிவைக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கோடை வெயில் அதிகமாக இருப்பதால், மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை தமிழக அரசு தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
சென்னையில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பள்ளித் திறப்புத் தேதியை தள்ளிவைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.