Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 9 June 2015

ரூ.281 கோடி மதிப்புள்ள பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட ரூ.281 கோடி மதிப்புள்ள பள்ளிக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை அன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடத்தை  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்கள்.
மேலும், தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் 278 கோடியே 82 லட்சத்து  72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிகள்,  பள்ளிக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், கிளை நூலகங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்கள்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 12,251 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் ஒரு தளத்துடன், 25 தங்கும் அறைகள், பார்வையாளர் அறை, சமையல் அறை, உணவு உண்ணும் அறை, நூலகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் சுமார் 100 மாணவியர் தங்குவதற்கு ஏதுவாக 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடத்தை முதல்வர் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 43 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வளாகங்களில் கட்டப்பட்டுள்ள 18 மாணவியர் விடுதிகள்; தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் 52 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  77 பள்ளிக் கட்டடங்கள்; 149 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 36 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 484 கூடுதல் வகுப்பறைகள்; 143 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 143 அறிவியல் ஆய்வுக் கூடங்கள்; வட்டார அளவில் கல்வி நிர்வாகம் செம்மையாக அமையும் பொருட்டு பகுதி-2 திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் - மேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் - விராலிமலை ஒன்றியங்களில் 39 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள்; நபார்டு வங்கிக் கடன் உதவி திட்டத்தின் கீழ் 17 மாவட்டங்களில் அமைந்துள்ள 51 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 62 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர் மற்றும் கழிப்பறைகள்; பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 70 கோடியே 92 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  721 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1240 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் - வால்பறை அரசு உண்டு உறைவிட பள்ளியில் 43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம்;  பொது மக்களிடம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் பொருட்டு பொது நூலக இயக்ககத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டம் - ஸ்ரீரங்கம் மற்றும் துறையூர் ஆகிய இடங்களில் 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகக் கட்டடங்கள்; என மொத்தம் 281 கோடியே 17 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், மாணவியர் விடுதிகள், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், கிளை நூலகங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

No comments: