கோடை விடுமுறை முடிவடைந்து வகுப்புகள் ஜூன் 1-ம் தேதி திறக் கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக் குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:
* பள்ளி தொடங்கும் நாள் அன்றே அனைத்து விலையில்லா பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். முதல் நாளிலே ஆசிரியர்களுக்கான கால அட்ட வணை கொடுத்திருக்க வேண்டும்.
* ஆசிரியர்கள் வகுப்பு தொடங்கு வதற்கு முன்னதாகவே வந்திருந்து மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். காலதாமதமாக வரு வதை முற்றிலும் தவிர்க்க வேண் டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மைதான வசதி சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் ஆசி ரியர்கள் வகுப்பறையில் செல் போன் பயன்படுத்தக் கூடாது. தலைமை ஆசிரியர்கள் இதை கண்காணிக்க வேண்டும்.
* ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு ஒழுக்கம், நற்பண்புகள் உள்ளிட்ட நல்ல கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்.
* 6 முதல் 8-ம்வகுப்பு வரை யுள்ள மாணவர்களுக்கு தினமும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
* மாணவர் சேர்க்கையை அதி கரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், பள்ளிகளில் ஆங்கிலப்பிரிவுகள் தொடங்கலாம். மாணவர்களின் வருகையை ஆசிரியர்கல் தினமும் கண்காணிக்க வேண்டும்.
* மாணவர்களுக்கு வழங்கப் படும் சத்துணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment