Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label B.E.. Show all posts
Showing posts with label B.E.. Show all posts

Saturday, 7 January 2017

TRB: Results and Final Keys for the Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013 - 14 and 2014 - 15

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013 - 14 and 2014 - 15
EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST
 Dated: 06-01-2017


Tuesday, 1 March 2016

மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள்: கலை-அறிவியல் கல்லூரிகள் திறக்க ஆர்வம் அதிகரிப்பு!

பொறியியல் கல்லூரிகள் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டு வந்தாலும், புதியதாக கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுவருகின்றன. 2016-17ஆம் கல்வியாண்டில் புதிய கல்லூரிகள் தொடங்க, 54 விண்ணப்பங்கள் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Friday, 24 July 2015

TNPSC: 213 உதவி பொறியாளர்கள் பணியிடம்: தமிழ்வழி பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு

தனியாரால் கவனிக்கப்படாதவர்கள் அரசுப் பணியில் சாதிக்க வாய்ப்பு

நெடுஞ்சாலை உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வில், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதன்மூலம், தனியார் நிறுவனங்களால் கவனிக்கப் படாத தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகள் அரசுப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழ்வழி பொறியியல் படிப்பு 2010-ல் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, அண்ணா பல் கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய 2 பாடப் பிரிவுகளில் தமிழ்வழி பொறியியல் படிப்பு தொடங்கப்பட்டது. ஒவ் வொரு பாடப்பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்வழி மாணவர்களுக்கு தமிழில் பொறியியல் பாடங்கள் நடத்தப்படும். அவர்கள் தமிழி லேயே தேர்வு எழுதலாம்.

Tuesday, 21 July 2015

TNPSC: நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவி பொறியாளர் பணி: அடுத்த மாதம் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நெடுஞ்சாலைத்துறையில் 213 உதவி பொறியாளர் பணிக்கு, வரும் 12-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், நெடுஞ்சாலைத்துறையில் 213 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு, சிவில் என்ஜினியரிங் பயின்றவர்கள், இன்று முதல், அடுத்த மாதம் 12-ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கான இணையதளத்துக்கு சென்று (http://www.tnpsc.gov.in/latest-notification.html)  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இதற்கான தேர்வு, வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி காலை, மாலை என இரண்டு வேளைகளும் நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, 14 July 2015

SSC Junior Engineer Recruitment 2015 – Apply Online for 1000 Vacancies:

Staff Selection Commission (SSC) has issued notification for the recruitment of 1000 Junior Engineer (Civil, Mechanical, Electrical, Quantity Surveying & Contract) Vacancies by conducting Junior Engineer Examination 2015. Eligible candidates can apply online from 11-07-2015 to 07-08-2015 by 05:00 P.M for Part-I Registration & 10-08-2015 by 05:00 P.M for Part-II Registration. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below…
SSC Junior Engineer Vacancy Details:
Total No. of Posts: 1000
Name of the Exam: Junior Engineers Examination, 2015.
Name of the Posts:
1. JE (Civil) Central Water Commission
2. JE (Mechanical) Central Water Commission
3. JE (Civil), CPWD
4. JE (Electrical), CPWD
5. JE (Civil), Department of Post
6. JE (Electrical), Department of Post
7. JE (Civil), MES
8. JE (Electrical & Mechanical), MES
9. JE (Quality Surveying & Contract), MES

Wednesday, 1 July 2015

பிளஸ் 2-வுக்கு பிறகு: எந்தப் பொறியியல் பாடம் ஏற்றம் தரும்?

சரியான பாடப்பிரிவைச் சரியான கல்லூரியில் தேர்ந்தெடுப்பதே கலந்தாய்வின் உண்மையான வெற்றி. கிடைக்கும் வாய்ப்புகளில் சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது சுலபத்தில் முடிந்துவிடும். ஆனால், சிறப்பான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கும்.
பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணிசமான மதிப்பெண்கள் இருந்தால், யார் வேண்டுமானாலும் இன்றைக்குப் பொறியியல் படிப்பில் சேரலாம். தங்களின் ஈடுபாடு, ஆர்வம், தனித்திறன் எதனையும் பொருட்படுத்தாது பெற்றோர்களின் அழுத்தம் காரணமாகவே பொறியியலில் சேரும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
ஆகவே, பொறியியல் படிப்பு என்று தீர்மானித்துவிட்டால், தங்களுக்கு உகந்த பாடப்பிரிவைத் தேர்வு செய்வது என்பது மாணவரின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது.

பொதுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது.
முதல் நாளில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கலந்தாய்வில் பொறியியல் கட்-ஆஃப் 200-க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198.25 கட்-ஆஃப் வரை எடுத்தவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
2015-16 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

Sunday, 21 June 2015

ISRO Recruitment 2015 – Apply Online for 109 Scientist/ Engineer Posts:

Indian Space Research Organization (ISRO), ISRO Centralised Recruitment Board (ICRB) has issued notification for the recruitment of 109 Scientist/ Engineer ‘SC’ vacancies. Eligible candidates can apply online from 19-06-2015 to 09-07-2015. Other details like age limit, qualification, selection process, how to apply are given below…
ISRO Vacancy Details:
Total No. of Posts: 109

Friday, 19 June 2015

TNEA 2015: Rank Enquiry

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 23 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துச் சாதனை

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.
சென்னை,  கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் அலுவலகத்தில், பொறியியல் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday, 16 June 2015

TNEA: பொறியியல் படிப்புக்கான சமவாய்ப்பு எண் வெளியீடு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று காலை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2015-16 கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை தமிழகத்தின் பிற மையங்களிலும், மே 29-ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருந்த மையங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகமாகின. இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும்.
இதுபோல் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கையும் இம்முறை வெகுவாகக் குறைந்தது. வெறும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இம்முறை சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை வெளியிடப்பட்டது. மாணவர்கள் இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Wednesday, 27 May 2015

South Eastern Railway Recruitment 2015 – 663 Apprentice Posts:

South Eastern Railway has issued a notification for the recruitment of 663 Apprentice vacancies on contract basis for various work shops. Eligible candidates may apply in prescribed format from 09-05-2015 to 08-06-2015 by 16:00 hrs. Other details like age, fee, educational qualification, selection process, how to apply are given below…
South Eastern Railway Vacancy Details:
Total No. of Posts: 663

Friday, 8 May 2015

TNEA-2015: Schedule of Events

இன்ஜி.,‘கட்-ஆப்’ அதிகரிக்கும்; மருத்துவப் படிப்பிற்கு குறைகிறது!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு ’சென்டம்’ எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான ’கட் - ஆப்’ அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், ’சென்டம்’ எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்பு ’கட் - ஆப்’ குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கணிதத்தில் 3,882 பேர் ’சென்டம்’ எடுத்தனர்; இது இந்த ஆண்டு இரண்டரை மடங்கு அதிகரித்து 9,710 பேர் ’சென்டம்’ எடுத்துள்ளனர். ஆனால் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் ’சென்டம்’ எண்ணிக்கை கடுமையாக குறைந்து உள்ளது.

பொறியியல் சேர்க்கை: விண்ணப்ப விநியோகம் 2 நாள்களில் 78,966-யை எட்டியது

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இரண்டு நாள்களில் 78,966-யை எட்டியுள்ளது.
பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மே 27-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் முதல் நாளில் 56,600 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாலை 5 மணி வரை 20,366 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும் மையங்களின் விவரம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் மே 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. இருந்தபோதும் அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை www.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.
பொறியியல் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும் மையங்களின் விவரம் https://www.annauniv.edu/tnea2015/pdf/sales.pdf என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Saturday, 25 April 2015

பொறியியல் விண்ணப்பம் மே 6; மருத்துவ விண்ணப்பம் மே 11 - தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 6ம் தேதியும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 11ம் தேதியும் துவங்குகின்றன.
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோக தேதிகள் அறிவிக்கப்பட்டன.

Thursday, 23 April 2015

பகுதிநேர பொறியியல் படிப்பு: விண்ணப்பம் குறித்த விவரம்

தமிழகத்தில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2015-16 ஆம் கல்வியாண்டிற்கு பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
1. அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 013
2. அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் 636 011
3. அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி 627 007
4. அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடி 630004 
5. தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர் 632 002
6. அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் 635 104
7. பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 004
8. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 641 014
9. தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை 625 015

Saturday, 18 April 2015

பொறியியல் உதவிப் பேராசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு

அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டித் தேர்வில் 57 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கும் வகையில் புதிய அறிவிப்பாணை மே மாதம் 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, போட்டித் தேர்வு 2014, அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற்றது. மொத்தம் 23,764 பேர் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 35 என நிர்ணயித்ததால் சர்ச்சை எழுந்தது.
இந்த வயது வரம்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் 57-ஆக உயர்த்தியது.