Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label COLLEGES. Show all posts
Showing posts with label COLLEGES. Show all posts

Monday, 18 July 2016

TNDCE: Online Transfer Counselling 2016-17 Application for Registration


Directorate Of Collegiate Education, Chennai - 600006
Important Instructions in filling in the

Online Transfer Counselling 2016-17 Application for Registration
Before filling in the application the applicants may fill in the appropriate details in appropriate boxes.
They are also requested to adopt the following instructions for easy processing of their application.
1. Type the initial at end of your name for example RAJA K, Gayathri Raguram.

2. Wherever the date format is required the date may be chooses appropriately.
Help us to process the application by following the above. We also wish you to reach the required destination.
Thank You for your kind cooperation !
 
 

 

Tuesday, 1 March 2016

மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள்: கலை-அறிவியல் கல்லூரிகள் திறக்க ஆர்வம் அதிகரிப்பு!

பொறியியல் கல்லூரிகள் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டு வந்தாலும், புதியதாக கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுவருகின்றன. 2016-17ஆம் கல்வியாண்டில் புதிய கல்லூரிகள் தொடங்க, 54 விண்ணப்பங்கள் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Tuesday, 9 February 2016

DCE: "செட்', "நெட்' தகுதியில்லாவிட்டாலும் பேராசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களுக்கு எம்.ஃபில், பிஎச்.டி., "செட்' அல்லது "நெட்' தகுதிகள் இல்லாவிட்டாலும் பேராசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அரசுக் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக, தகுதியில்லாதவர்கள் என்று திருப்பியனுப்பப்பட்ட பேராசிரியர்களை அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் பணிக்கு சேர்த்து வருகின்றன. பெரும் முறைகேட்டில் சிக்கிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருந்த 309 உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்களை மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
பேராசிரியர்கள் போராட்டம்: இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் பலர் குறிப்பாக அரசுக் கல்லூரிகளில் பி.பி.ஏ. துறைக்கு மாற்றப்பட்டவர்கள் எம்.பி.ஏ., முதுநிலை பட்டப் படிப்பை மட்டுமே முடித்தவர்கள் என்பதும், பேராசிரியர் தகுதிக்கான "செட்' அல்லது "நெட்' தேர்ச்சி அல்லது பிஎச்.டி தகுதி பெறாதவர்கள் என்பதும் முந்தைய தகுதியான "எம்.ஃபில்.' படிப்பைக் கூட முடிக்காதவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஏராளமான அரசுக் கல்லூரிகள் இவர்களை பணியில் சேர்க்காமல் திருப்பியனுப்பியது. இந்த நிலையில் இவர்களை பணியில் கட்டாயம் சேர்த்தாக வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் கடந்த 3-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி, தகுதி இல்லாதவர்கள் என்று திருப்பியனுப்பப்பட்டவர்களை அரசுக் கல்லூரிகள் மீண்டும் பணியில் சேர்த்து வருகின்றன. இவ்வாறு தகுதி இல்லாதவர்களை பணியில் அமர்த்துவதைக் கண்டித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாச்சலம் கூறியது:
கல்வித்தரம் பாதிக்கும்: யுஜிசி வழிகாட்டுதலின்படி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் 2006-க்கு முன்பாக பேராசிரியர் பணியில் சேர்ந்திருந்தால் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத தேர்ச்சியுடன் "எம்.ஃபில்.' முடித்திருக்க வேண்டும். 2006-க்கு பின்பு வந்த யுஜிசி நடைமுறைப்படி, முதுநிலை பட்டப் படிப்புடன் "செட்' அல்லது "நெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பை முடித்திருக்க வேண்டியது கட்டாயம்.
இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரிய தகுதியே இல்லாமல் பணிக்குச் சேர்ந்தவர்களை இப்போது அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றுவது பணித் தகுதி நடைமுறைகளையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
இதனால், உயர் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்பதோடு, உரிய தகுதியுடன் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் பல லட்சம் பேரின் நிலையை கேள்விக்குறியாக்கிவிடும். இவர்களைப் பணியில் சேர்ப்பதால், அரசுக் கல்லூரிகளில் பல்வேறு நிர்வாகக் குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உண்ணாவிரதம்: எனவே, இதனைக் கண்டித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகிற 13-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர். இதேபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தகுதியில்லாதவர்கள் பேராசிரியர் பணிக்கு அனுப்பப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அரசுக் கல்லூரி மன்றத் தலைவர் சிவராமனும் தெரிவித்தார்.

Tuesday, 2 February 2016

அண்ணாமலைப் பல்கலை 369 உதவிப் பேராசிரியர்கள்,அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்

       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 369 உதவிப் பேராசிரியர்கள், தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் தெரிவித்தார்.

Thursday, 21 January 2016

Monday, 9 November 2015

MHRD: New Education Policy

New Education Policy
Consultation Themes
Themes and questions for Policy Consultation on Higher EducationEnglish - (835 KB)  | Hindi - (696 KB)
Themes and questions for Policy Consultation on School EducationEnglish - (564 KB)  | Hindi - (434 KB)

Sunday, 6 September 2015

கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு: தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ புதிய கட்டுப்பாடு

கல்விச் சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல், மற்றும் களப் பயிற்சிக்கு செல்லும் மாணவர் களுக்கு கட்டாயம் விபத்து காப்பீடு எடுக்க வேண்டும் என்று அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் ஏஐசிடிஇ புதிய கட்டுப்பாடு விதித் துள்ளது.
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடம் சம்பந்தமாக நேரடி அனுபவம் மற்றும் களப்பயிற்சி பெறுவதற்காக கல்விச்சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதன்மூலம் மாணவர்கள் தங்கள் துறையில் நேரடி அனுபவம் பெறுகின்றனர்.

Monday, 31 August 2015

சுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்படுவது போல சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

Thursday, 23 July 2015

அரசு இசைக் கல்லூரியில் ஓட்டுநர் பணி: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் ஓட்டுநர் பணியிடத்துக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை தமிழக அரசு இசைக் கல்லூரியில் காலியிடமாக உள்ள, ஒரு வாகன ஓட்டுநர் பணியிடம் இனசுழற்சி முறையில், ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்) பிரிவின் கீழ் தாற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. 

Thursday, 16 July 2015

தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் சேர்க்கையில் முறைகேடு புகார்

யு.ஜி.சி. விதிகளின்படி தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் தகுதியற்ற ஆசிரியர்களை நியமிக்கும் போக்கு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் தமிழில் பி.எச்டி. பட்டம் பெற்ற கோவையைச் சேர்ந்த பெண், கல்லூரிகளில் ஆசிரியர் சேர்க்கை தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பெரும்பாலான தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் சேர்க்கையில் யு.ஜி.சி.யின் விதிகளைப் பூர்த்தி செய்யாமல் தன்னிச்சையான போக்கினை கடைபிடிக்கின்றனர். மிகக்குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்குடன் மட்டுமே நேர்முகத் தேர்வினை நடத்தி சேர்க்கை நடத்துகின்றனர்.
பணிமூப்பு உடைய ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்பட்சத்தில், அவர்களின் திறமை, பணிமூப்புக்கு ஏற்ப சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, படித்து முடித்துவிட்டு கற்பித்தல் திறமையில் போதிய முன்அனுபவம் இல்லாத பட்டதாரிகளையே பணியில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். பி.எச்டி. படிப்பு முடித்தவர்களுக்கு கூட மாதம் ரூ.6 ஆயிரம்தான் சம்பளம் தர முடியும். அதற்குக்கூட, சில கல்லூரிகள் ஜாதிய அடிப்படையில் முன்னுரிமை அளிக்கின்றனர். தனியார் கல்லூரிகள் கடைபிடிக்கும் இந்த போக்கால் தகுதியான ஆசிரியர் மூலம் கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

Tuesday, 14 July 2015

தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையம்: பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல்

தேசிய ஆன்-லைன் கல்வி உதவித் தொகை இணையத்தில் பல்கலைக்கழகங்கள் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே பரவலாக விளம்பரப்படுத்துமாறும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Tuesday, 7 July 2015

தமிழக கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்க யு.ஜி.சி., முடிவு

தமிழகத்தில்ராணி மேரி கல்லுாரிபச்சையப்பா கல்லுாரி மற்றும் அமெரிக்கன் கல்லுாரி உள்ளிட்டநான்கு கல்லுாரிகளுக்குவிரைவில் பாரம்பரிய கல்லுாரிக்கான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

Saturday, 4 July 2015

பேராசிரியர் தகுதி, கட்டமைப்பு விவரங்களை கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி குறித்த அனைத்துத் தகவல்களையும் அந்தந்தக் கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
மாணவர்கள், பெற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்வேறு தகவல்களை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அவற்றின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

Friday, 8 May 2015

கலை, அறிவியல் படிப்புகளில் சேர அதிகரிக்கும் ஆர்வம்!

கலை, அறிவியல் படிப்புகளில் சேர, மாணவ, மாணவியரிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுஉள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 முடித்தவுடன், இன்ஜி., படிப்பில் சேர, மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டி வந்தனர்; சமீபகாலமாக, கலை படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.

Saturday, 25 April 2015

இணையதள மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி கல்லூரி மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம் என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா கூறியிருப்பதாவது: பாடங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

Tuesday, 21 April 2015

தமிழகத்தில் புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை

 தமிழகத்தில் புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், மூன்று நாள் சர்வதேச மாநாடு, சென்னையில் துவங்கியது. பல்கலை, தொழிற்துறை மற்றும் சமூகம் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கல்வியை மேம்படுத்துவது எப்படி என்ற மையக் கருத்துடன் இந்த மாநாடு நடக்கிறது.

Monday, 9 February 2015

இரண்டாண்டு பி.எட் கல்வித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் கட்டாயம்: என்சிடிஇ

இரண்டாண்டு பி.எட். கல்வித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன்- ஒருங்கிணைந்த கல்வி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற என்.சி.டி.இ. புதிய வழிகாட்டுதல் தொடர்பான பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
என்.சி.டி.இ. புதிய வழிகாட்டுதலின்படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

Wednesday, 17 December 2014

TRB: Recruitment of Lecturers (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) For Govt. Law Colleges-2013-14 - Provisional List of Candidates Called for Interview

Teachers Recruitment Board  College Road, Chennai-600006
PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR INTERVIEW

DIRECT RECRUITMENT OF LECTURERS (SENIOR SCALE) / LECTURERS SENIOR SCALE (PRE-LAW) FOR GOVERNMENT LAW COLLEGES - 2013 - 2014
As per the Notification No.4/2014 published on 22.07.2014, the Written Competitive Examination for the Direct Recruitment of Post of Lecturer Senior Scale and Lecturer Senior Scale in Pre-Law was held on 21.09.2014 and the Provisional Results of all the candidates has already been released.
The subject-wise list of candidates provisionally short-listed for interview based on Written Examination marks and following communal rotation are hereby released.
Interview for the provisionally short listed candidates will be held on 2nd January 2015 at the Teachers Recruitment Board, EVK Sampath Maaligai, College Road, Chennai - 600 006.
The call letters for interview are being sent to the short listed candidates individually. It may be noted that the results now released are purely tentative. Calling for interview is not a guarantee for selection.

Thursday, 27 November 2014

அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசே நடத்தக்கோரி சென்னை டிபிஐ-யில் மாணவர்கள் முற்றுகை: கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

அரசு உதவி பெறும் கல்லூரிகளான கோவை சிபிஎம், ஈரோடு சிஎன்சி கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தக் கோரி அக்கல்லூரி மாணவ-மாணவி கள் சென்னையில் நேற்று டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை புதூரில் உள்ள சி.பி.முத்துசாமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்யப்படாததுடன் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை நீக்க நிர்வாகத்தினர் முயற்சி செய்வதாக மாணவர்கள் புகார் கூறிய வண்ணம் உள்ளனர்.