Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label HSC. Show all posts
Showing posts with label HSC. Show all posts

Thursday, 16 July 2015

பிளஸ் 2: முதல் நாளில் 31 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு

பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட முதல் நாளில் 31 ஆயிரம் பேர் தங்களது கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்தனர்.
வேலைவாய்ப்புக்காக ஆன்-லைன் மூலம் ஜூலை 15 முதல் 27 வரை பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 14 July 2015

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்வு முடித்த மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது 90 நாட்களுக்கு செல்லத்தக்கது; இதன் மூலம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
நாளை முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரிடமும் அசல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்?

பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.

Saturday, 4 July 2015

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 4.9 சதவீதம் குறைவாக இருந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் குறைவாகவே இருந்தது.

Wednesday, 1 July 2015

பிளஸ் 2-வுக்கு பிறகு: எந்தப் பொறியியல் பாடம் ஏற்றம் தரும்?

சரியான பாடப்பிரிவைச் சரியான கல்லூரியில் தேர்ந்தெடுப்பதே கலந்தாய்வின் உண்மையான வெற்றி. கிடைக்கும் வாய்ப்புகளில் சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது சுலபத்தில் முடிந்துவிடும். ஆனால், சிறப்பான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கும்.
பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணிசமான மதிப்பெண்கள் இருந்தால், யார் வேண்டுமானாலும் இன்றைக்குப் பொறியியல் படிப்பில் சேரலாம். தங்களின் ஈடுபாடு, ஆர்வம், தனித்திறன் எதனையும் பொருட்படுத்தாது பெற்றோர்களின் அழுத்தம் காரணமாகவே பொறியியலில் சேரும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
ஆகவே, பொறியியல் படிப்பு என்று தீர்மானித்துவிட்டால், தங்களுக்கு உகந்த பாடப்பிரிவைத் தேர்வு செய்வது என்பது மாணவரின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது.

Friday, 8 May 2015

பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
மறுகூட்டல், விடைத்தாளின் நகல்கள் பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறு கூட்டல் செய்வதற்கு மொழி பாடங்களுக்கு தலா ரூ.305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ.205-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகிக்கப்பட உள்ளன.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு வரும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்:
 ஆங்கிலப் பாடத்தில்
1. சி.எஸ்.ஸ்ரேஷா 197 - 1194
2. ஜே.பவித்ரா 197 - 1192
3 பூஜிதா 197 - 1186
 இயற்பியல்
1. எஸ்.இ.விக்னேஷ்வரன், எம்.சரண் ராம், ஆர்.பிரவீன் 200 - 1190
2. வி.மோதிஸ்ரீ, ஜி.கார்திக் 200 - 1187
3. ஜி.நிவாஷ் 200 - 1186

TNDGE: HSC Examination Results - March 2015

Government of Tamil Nadu
Directorate of Government Examinations
HSC Examination  Results  - March 2015 The results are available at the following websites
Candidate has to provide his Registration No and Date of birth in DD/MM/YYYY format to see the result

Thursday, 23 April 2015

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் உள்ள 3,298 மையங்களில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 75 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிள்ஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி காலை 10 மணிக்கும், +2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

Monday, 6 April 2015

கடந்த 1986-87 ஆண்டு வரையிலான ஆசிரியர் பட்டயச் சான்று பிளஸ் 2-க்கு இணையானது

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் முன்பாகப் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பட்டயச் சான்றானது, பிளஸ் 2 வகுப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அண்மையில் வெளியிடப்பட்ட உத்தரவு:

பிளஸ் 2 தேர்வில் 10 முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி

 பிளஸ் 2 தேர்வில், 10 முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது; இப்பணி வரும் 14ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; கணிதம், விலங்கியல், வேதியியல் தேர்வுகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Friday, 3 April 2015

தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில் 12 மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவு

பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச் 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, தேர்வுகள் நடந்தன. தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.
விடை எழுத முடியாமல் தவிப்பு
தோட்டக்கால் பயிர் குறித்து இடம்பெற்ற, 47வது கேள்விக்கு, மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். ஏனெனில், பாடப்புத்தகத்தில், நன்செய் பயிர் குறித்துதான் அவர்கள் படித்துள்ளனர். நன்செய் பயிர்தான் தோட்டக்கால் பயிர் என்பது பாடத்திட்டத்தில் இல்லை. இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. தவறான வினா குறித்த செய்தி, நமது நாளிதழில் மார்ச் 21ம் தேதி செய்தி வெளியானது.
வினாக்கள் குளறுபடி
இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், வேளாண் செயல்முறைகள் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம் விசாரணை நடத்தினர். இதில், வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில், நன்செய் பயிர் குறித்த, 10 மதிப்பெண் கேள்வி; ஒரு மதிப்பெண்ணுக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விக்கு, மொத்தம் 12 கருணை மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்.,6 முதல் புத்தகம் விநியோகம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது.
அதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் இந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் பிளஸ் 2 புத்தகங்கள் 100 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன.

Saturday, 14 March 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும்: ஆசிரியர் கழகம் கோரிக்கை

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணியை தேர்வுத்துறை தொடங்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் வீரபாண்டியராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Sunday, 8 March 2015

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 16ல் தொடக்கம்



பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Wednesday, 4 March 2015

+2 பொதுத் தேர்வு : சந்தேகங்களை கேட்க, புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

தமிழகத்தில் நடைபெறும் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைக் கேட்கவும் புகார்களை தெரிவிக்கும் பொருட்டும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வருகிற 05.03.2015 அன்று தொடங்கி 31.03.2015 வரை நடைபெறவுள்ள  மேல்நிலைத் தேர்வுகள், 19.03.2015 அன்று முதல் 10.04.2015 வரை நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள்  தொடர்பாக  பொதுமக்கள் / மாணவர்கள் பயன்பெறுவதற்கு  அரசுத் தேர்வுத் துறையில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

Thursday, 26 February 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிகழாண்டு முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்பட உள்ளது.

Wednesday, 21 January 2015

10 & +2 : பொதுத்தேர்வில் கோடியிட்ட தாள்கள் பயன்படுத்த கல்வித்துறை முடிவு

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மொழிபாடங்களுக்கு மட்டும் கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்) பயன்படுத்த தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு பொதுத்தேர்வில் மொழிபாடங்களை எழுதும் மாணவர்கள் சிலர் சரியான நேர்கோட்டில் எழுதாததால், விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த குறைபாடுகளை களையும் பொருட்டு, பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்) வழங்கினால், சீரமம் குறையும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, அரசு பொதுத்தேர்வு இயக்குனர் தேவராஜன் இந்தாண்டு முதல் மொழிப்பாடங்களுக்கு மட்டும் கோடியிட்ட தாள்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Wednesday, 24 December 2014

பிளஸ் 2 மாணவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று சரிபார்ப்பு

மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவ, மாணவியரின் திருத்தம் செய்யப்பட்ட இறுதிப்பட்டியல் சரிபார்ப்பு (டிச.24) புதன்கிழமை மதுரையில் முதன்மைக் கல்வி அலுவலர் இ.ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலையில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி துவங்கி, மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வெழுதும் பள்ளி மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி ஏற்கெனவே, அந்தந்த பள்ளிகள் மூலம் தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.