Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label STUDENTS. Show all posts
Showing posts with label STUDENTS. Show all posts

Wednesday, 20 January 2016

TN.GOVT. JOB: Recruitment:Assistant Inspector of Sericulture/Junior Inspector of Sericulture

Ongoing Recruitment:Assistant Inspector of Sericulture/Junior Inspector of Sericulture

IMPORTANT DATES and INFORMATION:
DATE OF NOTIFICATION13-01-2016
Applications are invited only through online mode till27-01-2016 (11.59PM)
Application FeeRs:500/-
After submitting application through online,a downloaded copy of the application should be sent either by post or in person at the office of the Director of Sericulture,Salem - 636 007. during office hours on working days.
The last date for receipt of application is 28-01-2016(5.45PM)
28-01-2016(5.45PM)
Fee should be paid in the form of Demand Draft drawn in favour of "Director of Sericulture ".payable at salem.

Saturday, 2 January 2016

Periyar University: November - 2015 - UG Examinations Result

November - 2015 - UG Examinations Result
Register Number
:    
Date of Birth
:    

Friday, 2 October 2015

அரசுப் பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.), அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.எம்.டி.) உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் விதத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அகில இந்திய எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு: ஒரு வாரத்துக்குள் இடங்களை நிரப்ப மாநிலங்களுக்கு உத்தரவு

2015-16 கல்வியாண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை அந்தந்த மாநிலங்களே ஒரு வாரத்துக்குள் நிரப்பிக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
2015-16 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த கிருத்திகா நிகாம், ஆர்.சந்தோஷ், ராகுல் குமார் சர்மா உள்ளிட்ட மாணவர்கள், தங்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 

Sunday, 6 September 2015

கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு: தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ புதிய கட்டுப்பாடு

கல்விச் சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல், மற்றும் களப் பயிற்சிக்கு செல்லும் மாணவர் களுக்கு கட்டாயம் விபத்து காப்பீடு எடுக்க வேண்டும் என்று அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் ஏஐசிடிஇ புதிய கட்டுப்பாடு விதித் துள்ளது.
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடம் சம்பந்தமாக நேரடி அனுபவம் மற்றும் களப்பயிற்சி பெறுவதற்காக கல்விச்சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதன்மூலம் மாணவர்கள் தங்கள் துறையில் நேரடி அனுபவம் பெறுகின்றனர்.

TNTEU: Syllabus for B.Ed. & M.Ed. Degree Programme (First Year)

Sunday, 2 August 2015

8ம் வகுப்பு வரை பாஸ்; இனி கிடையாது

பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்ற கல்விகொள்கையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகமத்திய மனிதவளத்துறை இணையமைச்சர் ராம் ஷங்கர் கத்தாரியாதெரிவித்துள்ளார். 
தொடக்க கல்வியின் தரம் மோசமடைந்து விட்டதால், அதனை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Monday, 27 July 2015

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமானார்

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காலமானார்.
மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இந்திய ராணுவ மருத்துவர்கள் விரைந்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Friday, 24 July 2015

ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தருவார்!

மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை,பள்ளிகள் மூலமே வாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில், 6ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ் கேட்கப்படுகின்றன.

மாணவிகளின் உயர் கல்விக்கான "உதான்' திட்டம்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்

மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் சேரும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பயிற்சித் திட்டமான "உதான்' திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசித் தேதியாகும்.

Thursday, 23 July 2015

பள்ளி பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை

பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிகளில் பாதுகாப்பற்ற, ஆபத்தான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளது.

Wednesday, 22 July 2015

அரசுப் பள்ளி மாணவர்கள் 31,000 பேருக்கு ஆங்கிலப் பயிற்சி

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதற்காக "கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனத்துடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மகிழ்ச்சியுடன் படித்தல் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சியை அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அதன்படி, இந்தப் பள்ளிகளில் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும் என கரடி பாத் கல்வி நிறுவன இயக்குநர் சி.பி.விஸ்வநாத் கூறினார்.

Monday, 20 July 2015

மத்திய அரசின் டிஜிட்டல் வேலைவாய்ப்பகம்

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்குக் கீழான இளைஞர்கள். இவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இன்றைய தொழில்துறைக்குத் தேவையான திறன்படைத்த இளைஞர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
இதனால் தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தை மத்திய அரசின் சிறு, குறு தொழில்களுக்கான அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்த இணைய தளத்தில் வேலை தேடுபவர் தனது படிப்பு, திறன்கள் உள்ளிட்ட தன்னைப் பற்றிய விபரங்களை அளித்துத் தன்னைப் பதிவு செய்துகொள்ளலாம். அவரது தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அவருக்கான தனியான எண்ணும் பாஸ்போர்ட்டும் தரப்படும். அதேபோல தொழில் நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கும் பயனர் எண்ணும், பாஸ்போர்ட்டும் தரப்படும். தங்களுக்குத் தேவையானவர்களைத் தொடர்புகொண்டு அவர்களை நேர்காணலுக்கு அழைக்கலாம். அதில் தேர்வு பெற்றால் அவருக்கு வேலையளிக்கலாம்.
எத்தனையோ தனியார் வேலைவாய்ப்பகங்கள் இணையத்தில் இருந்தாலும் தொழில்நிறுவனங்களுக்கும் வேலைதேடுவோருக்குமான இணைப்பகமாக மத்திய அரசு இந்த டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தைத் தொடங்கியுள்ளது. நீங்களும் பதிவு செய்ய www.eex.dcmsme.gov.inஎன்ற முகவரிக்குச் செல்லலாம்.

Thursday, 16 July 2015

பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிகள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்படுகிறதா?

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவிகள் அடுத்தடுத்து பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் கூறி வருவதும், பல்கலைக்கழக நிர்வாகம் புகார்களை மறுத்து வருவதும் வாடிக்கையாக மாறியுள்ளது.
நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீது பாலியல் மற்றும் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்ச்சிப் படிப்பு மாணவிகள் இருவர், காவல்துறை மற்றும் ஆட்சியரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.