தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு செல்போன் கொண்டு வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சேர்க்கை நடைபெறும் போது தனியார் பள்ளி நிர்வாகம் சேர்க்கைக்கான முன்பணம் அதிகமாக வசூலித்து வருவதாகவும், இதை சிலர் வீடியோ எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அதிகமாக முன்பணம் மாணவர்களிடம் வசூலித்தால் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளி நிர்வாகம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடம் செல்போன் தருவதை பெற்றோர்கள் அறவே தவிர்க்க வேண்டும். மீறி பள்ளி வாளகத்திற்குள் செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment