கோடை வெயில் அதிகமாக இருப்பதால், மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை தமிழக அரசு தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
சென்னையில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பள்ளித் திறப்புத் தேதியை தள்ளிவைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment