Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 6 September 2015

கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு: தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ புதிய கட்டுப்பாடு

கல்விச் சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல், மற்றும் களப் பயிற்சிக்கு செல்லும் மாணவர் களுக்கு கட்டாயம் விபத்து காப்பீடு எடுக்க வேண்டும் என்று அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் ஏஐசிடிஇ புதிய கட்டுப்பாடு விதித் துள்ளது.
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடம் சம்பந்தமாக நேரடி அனுபவம் மற்றும் களப்பயிற்சி பெறுவதற்காக கல்விச்சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதன்மூலம் மாணவர்கள் தங்கள் துறையில் நேரடி அனுபவம் பெறுகின்றனர்.

இந்நிலையில், கல்விச் சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல், களப்பயிற்சி போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லப்படும் தொழில் நுட்ப கல்வி மாணவர்களின் பாது காப்பை உறுதிசெய்திடும் வகை யில் அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பொறியியல் மற்றும் தொழில்நுட் பக் கல்லூரிகளுக்கு புதிய விதி முறைகளை கொண்டுவந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வரு மாறு:-
* மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் செல் போன் எண் அடங்கிய பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
* ஒவ்வொரு மாணவருக்கும் உடன் செல்லும் ஆசிரியர்களுக்கும் உரிய விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு எடுக்கப்பட் டிருக்க வேண்டும். காப்பீட்டுச் செலவுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* மாணவிகள் செல்வதாக இருந் தால் அவர்களின் துணைக்கு கட்டாயம் ஒரு ஆசிரியை உடன் செல்ல வேண்டும்.
* அனைத்து மாணவர்களுக்கும் அங்கீகாரம் பெற்ற டாக்டரி டம் இருந்து மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண் டும்.
* மாணவர்களின் பாதுகாப்புக்கு உடன் செல்லும் ஆசிரியர்கள் பொறுப்பேற்று உறுதியளிக்க வேண்டும். அத்துடன் மாணவர் களுக்கு ஏதேனும் நேரிட்டால் பொறுப்பேற்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* மாணவர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் மேற்கொள்ளவுள்ள நிகழ்ச்சி குறித்து முன்கூட்டியே ஒரு அறிமுகப்பயிற்சிக்கு ஏற் பாடு செய்யலாம். வெளியில் செல்லும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கலாம்.
* மாணவர்களுடன் செல்லும் பொறுப்பு ஆசிரியர்கள், ஒவ் வொரு மாணவரின் உடல்நலனை யும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
* வெளியில் செல்லும்போது நீச்சல், படகு சவாரி போன்ற வற்றில் ஈடுபடுவதாக இருந் தால், கண்டிப்பாக ஒரு மேற் பார்வையாளர் அல்லது பாதுகாவ லர் உடன் இருக்க வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாமல் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏஐசிடிஇ எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்விச்சுற்றுலா, தொழிற் சாலை பார்வையிடல் போன்றவற் றுக்காக மாணவர்களை அழைத்துச் செல்லும்போது ஏஐசிடிஇ வரை யறை செய்துள்ள பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகளை கண்டிப் பாக பின்பற்றுமாறு அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருப்பதாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக் குநர் எஸ்.மதுமதி தெரிவித்தார்.

No comments: