Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

CSIR-NET/JRF

CSIR NET/JRF

CSIR-UGC விரிவுரையாளர் தகுதித் தேர்வு


  • ல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெற்று ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் சிஎஸ்ஐஆர்-யுஜிசி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும். ஜூன், டிசம்பர் மாதங்களில் அதாவது ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரு, பவநகர், போபால், புவனேஸ்வரம், சண்டீகர், சென்னை, கொச்சி, தில்லி, குண்டூர், குவாஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஐம்மு, ஜாம்ஷெட்பூர், காரைக்குடி, கொல்கத்தா, லக்னோ, நாக்பூர், பிலானி,புனே, ராய்ப்பூர், ரூர்க்கி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், உதய்ப்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. லைஃப் சயின்சஸ், எர்த், அட்மாஸ்பெரிக், ஓசன் அண்ட் பிளானிட்டரி சயின்சஸ், பிசிக்கல் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு ஜூன் 23-ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை நடைபெறும். கெமிக்கல் சயின்சஸ், மேத்தமேட்டிக்கல் சயின்சஸ், என்ஜினீயரிங் சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு அதே நாளில் பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறும். என்ஜினீயரிங் சயின்சஸ் தவிர மற்ற பாடங்களுக்கான கேள்வித்தாள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

    பி.எஸ்., நான்கு ஆண்டு பட்டப் படிப்பு, பி.இ., பி.டெக். பி.பார்ம், எம்.பி.பி.எஸ்., ஒருங்கிணைந்த பி.எஸ்.,-எம்.எஸ்., அல்லது எம்எஸ்சி படிப்புகள் அல்லது அதற்கு நிகரான படிப்புகளில் பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் இந்தப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிக்கச் சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., ஆனர்ஸ் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த எம்.எஸ்.-பி.எச்டி., படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம், பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறைந்தது 50 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    அறிவியல், பொறியியல் அல்லது வேறு பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பி.எச்டி., அல்லது ஒருங்கிணைந்த பி.எச்டி., படிப்பில் பதிவு செய்த பிறகுதான் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். விரிவுரையாளருக்கான நெட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜே.ஆர்.எஃப்.-நெட் தேர்வு எழுத விரும்புபவர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, 28 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். விரிவுரையாளர் பணிக்கான நெட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

    இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இந்தியன் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளில் விண்ணப்பப் படிவங்களையும் விளக்கக் குறிப்புகளையும் பெறலாம். நேரில் விண்ணப்பங்களைப் பெற பொதுப்பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.400. ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.200. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்குக் கட்டணம் ரூ.100. புதுதில்லியில் மேற்கு பட்டேல் நகரில் உள்ள இந்தியன் வங்கிக்கு டிமாண்ட் டிராப்ட் மூலம் பணத்தை அனுப்பி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


    ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கி செலான் மூலம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, வங்கிச் செலான் மற்றும் உரிய இணைப்புகளுடன் Sr. Controller of Examination, Examination Unit, HRDG, CSIR Complex, Library Avenue, Pusa, New Delhi - 110012 என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

Joint CSIR UGC NET Exam Question Papers
Exam DateSubject  (Booklet Code)Answer Keys  (Booklet Code)
June 2013
Chemical Sciences   A  B  C

Earth Sciences   A  B  C

Life Sciences   A  B  C

Mathematical Sciences   A  B  C

Physical Sciences   A  B   B(E)  C   C(E)

Engineering Sciences   A  B  C
 
  B  C  Corrected C

  B  Corrected B  C

  B  C

  B  C

  B  B(E)  C  C(E)

A  B  C

No comments: