Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 6 September 2015

இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து

இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத் தும் பொறுப்பு ஆசிரியர்களின் கையில் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசினார்.
தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆசிரியர் தினம் மற்றும் ஆசிரியர் செம்மல் விருது வழங்கும் விழா மயிலாப்பூரிலுள்ள முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்ல வளாகத்தில் நேற்று நடைபெற்றது.விழாவுக்கு தலைமையேற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது:
சிறந்த அறிஞராகவும், ஆசிரியராக வும் விளங்கிய டாக்டர் ராதாகிருஷ் ணனின் இல்லத்தில் நடைபெறும் விழாவில் சிறப்பான கல்விப்பணி செய்தவர்களுக்கு விருது வழங்கு வது பாராட்டுக்குரியது.சமுதாய உருவாக்கம் என்பது ஒருவரின் மாணவ பருவத்திலிருந்து தொடங்கு கிறது. மாதா,பிதா,குரு, தெய்வம் என்று பெற்றோருக்கு அடுத்து நாம் ஆசிரியர் களைத்தான் போற்றுகின்றோம்.

சங்கத் தமிழ் இலக்கியப் பாடல் களிலும், சித்தர் பாடல்களிலும் ஆசிரி யரை மதித்துப் போற்றும் பாடல்கள் இருக்கின்றன. ஒருவர் தன் வாழ்வில் வெற்றி பெற ஆசிரியர்களின் வாழ்த்தும் வழிகாட்டுதலும் அவசியம். ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்வை செழுமைப்படுத்த வேண்டும்.இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களின் கையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில்,தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் கல்விப் பணி செய்த 85 பேருக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டன. இவ்விழாவில்,தமிழக கல்வி ஆராய்ச்சி நிறுவன ஆற்றுநர் பேராசிரி யர் பி.ரத்தினசபாபதி, இயக்குநர் கோ.பெரியண்ணன், வல்லுநர் வஜ்ரவேலு, தமிழ் மாநில ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.ராஜமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

No comments: