மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது வருங்கால வைப்புநிதியில் இருந்து முன்பணம் பெற முடியாமல் தவித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலர் டி.பாபுசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருங்கால வைப்புநிதி கணக்கில் மாதந்தோறும் தவறாமல் செலுத்தி வரும் சந்தா தொகையானது மாவட்டக் கரூவூலகத்தில் சரியான கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் அப் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை ஆசிரியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருங்கால வைப்புநிதி கணக்கில் இருந்து முன்பணம் பெற முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அப பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தங்களுக்கு உரிய வருங்கால வைப்புநிதி கணக்கை முடித்து பணபலன் ஏதும் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் மனஉளைச்சல் அடைந்துள்ளனர். பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கருவூல அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை முழுமையான பலனில்லை. ஆகவே, இப் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment