ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ -மாணவியர், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர், கல்வி உதவித் தொகை பெற, ஆண்டு வருமான உச்ச வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மூன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரை, வழங்கப்பட்ட ஆண்டு உதவித் தொகை, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு வரை நீட்டித்து 1,500 ரூபாய் வழங்கவும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தகுதியுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர் இதை பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கேட்டுக்கொள்கிறார்.
No comments:
Post a Comment