தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்–4 தேர்வில் மீதமுள்ள 88 காலிப்பணியிடங்களுக்கான ஆறாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு நாளை (புதன்கிழமை) காலை 08.30 மணி முதல் சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
6–வது கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் போன்ற விவரம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், நிலஅளவர், வரைவாளர் பதவிகளுக்கு இந்த கலந்தாய்வு நடக்கிறது. மேலும் இந்த கலந்தாய்வுக்கு வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment