யு.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் கீழ் செயல்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் புதன்கிழமை வெளியிட்டது.
அதன் விவரம்:
நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பயிற்சி மையத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் கல்லூரி
களின் பேராசியர்களைக் கொண்ட குழு மூலமாக இந்தப் பயிற்சியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் மாதிரி ஆளுமைத் தேர்வு, சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை நடத்தப்படும்.
நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க உள்ளவர்கள் தங்களது மூன்று புகைப்படங்களுடன், மத்திய தேர்வாணைக் குழுவின் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலுடன், பெயரையும், மற்ற விவரங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-24621909, 044-24621475.
No comments:
Post a Comment