தனியாரால் கவனிக்கப்படாதவர்கள் அரசுப் பணியில் சாதிக்க வாய்ப்பு
நெடுஞ்சாலை உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வில், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதன்மூலம், தனியார் நிறுவனங்களால் கவனிக்கப் படாத தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகள் அரசுப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழ்வழி பொறியியல் படிப்பு 2010-ல் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, அண்ணா பல் கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய 2 பாடப் பிரிவுகளில் தமிழ்வழி பொறியியல் படிப்பு தொடங்கப்பட்டது. ஒவ் வொரு பாடப்பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்வழி மாணவர்களுக்கு தமிழில் பொறியியல் பாடங்கள் நடத்தப்படும். அவர்கள் தமிழி லேயே தேர்வு எழுதலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்வழி சிவில், மெக்கானிக்கல் படிப்பு கள் தொடங்கப்பட்டன. தற்போது தமிழ்வழியில் சிவில் இன்ஜி னீயரிங்கில் 660 இடங்கள், மெக் கானிக்கல் இன்ஜினீயரிங்கில் 720 இடங்கள் உள்ளன.
அதே நேரம், தனியார் நிறு வனங்கள் நடத்தும் வளாக நேர்முகத்தேர்வுகளில் (கேம்பஸ் இன்டர்வியூ) ஆங்கிலவழியில் படிக்கும் மாணவர்களைவிட, தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிக மிக குறைவாகவே உள்ளன. தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளின் முதல் அணி கடந்த ஆண்டுதான் வெளியே வந்தது. அவர்கள் 120 பேரில் 2 பேருக்கு மட்டுமே வளாக நேர்முகத்தேர்வில் பணிநியமனம் கிடைத்தது. மற்றவர்களுக்கு ஒருசில கட்டுமான நிறுவனங்களில் குறைந்த சம்பளத்தில் வேலை கிடைத்தது.
இதனால், தமிழ்வழி பொறி யியல் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் மிகவும் தயங்கு கின்றனர். தற்போது நடந்துவரும் கலந்தாய்வில்கூட மாணவர்கள் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே தமிழ்வழி பொறியியல் படிப்பை தேர்வுசெய்கின்றனர். நேற்றைய நிலவரப்படி தமிழ்வழி படிப்பில் மொத்தம் உள்ள 1,380 இடங்களில் 260 இடங்களே நிரம்பியுள்ளன.
இந்நிலையில், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசுப் பணிவாய்ப்பு தேடி வந்திருக்கிறது. நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவி பொறி யாளர்கள் (சிவில்) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் அளிக்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீடு இந்த நியமனத்தில் பின்பற்றப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது. அதன்படி, தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு (சிவில்) ஏறத்தாழ 42 இடங்கள் ஒதுக்கப்படும்.
உதவி பொறியாளர் நியமனத் துக்கான போட்டித்தேர்வு செப் டம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அல்லது இந்த ஆண்டு தமிழ்வழியில் சிவில் இன்ஜினீயரிங் முடித்தவர்கள் தோராயமாக 21 அல்லது 22 வயதி னராக இருப்பார்கள். இவர்கள் நேரடியாக உதவி பொறியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டால், சுமார் 37 ஆண்டுகாலம் வரை அரசுப் பணியில் இருக்க முடியும். உதவி கோட்டப் பொறியாளர், கோட்டப் பொறியாளர், கண் காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் என படிப் படியாக பதவி உயர்வு பெற்று நெடுஞ்சாலைத் துறையின் தொழில்நுட்பப் பிரிவில் தலைமை பதவியான டைரக்டர் ஜெனரல் (தலைமை பொறி யாளர் அந்தஸ்து) பதவி வரை உயரமுடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசுப் பணி வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு (சிவில்) ஏறத்தாழ 42 இடங்கள் ஒதுக்கப்படும்.
No comments:
Post a Comment