Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 8 May 2015

பொறியியல் சேர்க்கை: விண்ணப்ப விநியோகம் 2 நாள்களில் 78,966-யை எட்டியது

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இரண்டு நாள்களில் 78,966-யை எட்டியுள்ளது.
பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மே 27-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் முதல் நாளில் 56,600 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாலை 5 மணி வரை 20,366 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments: