உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிறைவு செய்யவில்லை எனில், சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில், அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆசிரியர்களுக்கு, ஏமாற்றத்தை தந்துள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளாக, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், இதுவரை உடற்கல்வி, ஓவியம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மேற்கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னை கோட்டையில், ஆகஸ்டு, 6ம் தேதி, 4,000 உடற்கல்வி ஆசிரியர்கள் பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment