Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 8 May 2015

பொறியியல் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும் மையங்களின் விவரம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் மே 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. இருந்தபோதும் அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை www.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.
பொறியியல் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும் மையங்களின் விவரம் https://www.annauniv.edu/tnea2015/pdf/sales.pdf என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments: