Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 20 February 2014

மாவட்ட நூலக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் முதல்வர்

மாவட்ட நூலகங்களை சிறப்பான முறையில் மேற்பார்வையிட வேண்டும் என்ற கருத்துடன் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 32 மாவட்டங்களிலுள்ள மாவட்ட நூலக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

பள்ளி அளவில் நடைபெற்ற  சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற 11 வயது, 14 வயது, 17 வயது மற்றும் 19 வய ற்குட்பட்ட 11,25,628 மாணவ, மாணவியர்களில் 24 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில், முதலிடம் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகையாக தலா 1,200 ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற  8 மாணவ, மாணவியருக்கு தலா 800 ரூபாய், மூன்றாம் இடம் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு தலா 400 ரூபாய், என மொத்தம் 24 மாணவ, மாணவியருக்கு 19 ஆயிரத்து 200 ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதன் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு மாணவிக்கு பரிசுத் தொகையினை வழங்கி பாராட்டினார்.
அரசு மற்றும் அரசு நிதி  உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அம்மாணாக்கர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமலிருக்க, அக்குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்பு செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நிரந்தர வைப்பு நிதியாக வழங்கும் தி ட்டத்தின் கீழ், 2011-12 மற்றும் 2012-13ஆம் கல்வி ஆண்டுகளில் மொத்தம் 720 மாணவ மாணவியர்கள் பயன் பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாயை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அதேபோன்று,  2013-2014ஆம் கல்வியாண்டில் 360 மாணவ மாணவியர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்குவதன் அடையாளமாக ஜெயலலிதா ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கான பத்திரத்தை  வழங்கினார்.

No comments: