கடலூர் அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கடந்த 1998ஆம் ஆண்டு முதல் கடலூர் புதுப்பாளையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2014-15ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குரலிசை, பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய பிரிவுகளில் சேருவதற்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஏனைய படிப்புகளுக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 13 முதல் 25 வயது வரை இருத்தல் வேண்டும். இசைப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விடுதி வசதி, இலவச பேருந்து பயணஅட்டை வழங்கப்படுகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ளபடி இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.400 வீதம் வழங்கப்படுகிறது. அரசு இசைப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment