Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 24 July 2015

TNTEU: கல்வியியல் பல்கலைக்கு இடைக்கால கமிட்டி அமைப்பு

ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் ஓய்வு பெற்றதை அடுத்துபல்கலை பணிகளை கவனிக்கஉயர்கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில்மூன்று பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்பி.எட்., - எம்.எட்., - எம்.பில்.படிப்புகளை நடத்தும், 690 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்,தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இந்த பல்கலையின் துணைவேந்தராக இருந்த விஸ்வநாதன், 22ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இவர், 2012 முதல் துணைவேந்தராக பணியாற்றியவர்.

பி.எட்.படிப்பில், 10 புதிய பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்தார். எம்.பில்.மற்றும் பி.எச்டி.ஆராய்ச்சிப் படிப்புகளையும் அறிமுகப்படுத்தினார். பி.எட்.படிப்பில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங்ஆன்-லைன்வருகைப்பதிவேடுபல்கலை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பல திட்டங்களை அமல்படுத்தினார்.
அவர் ஓய்வுபெற்ற நிலையில்பல்கலையின் பணிகளை கவனிக்கமூன்று பேர் அடங்கிய இடைக்காலக் கமிட்டியை அரசு அமைத்துள்ளது.
தமிழக உயர் கல்வி முதன்மைச் செயலர் அபூர்வாகல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் கோவிந்தன் ஆகியோர் கமிட்டி யில் இடம் பெற்றுள்ளனர்.
இன்னும்மூன்று மாதங்களில்பல்கலைக்கு புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார் எனஉயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

No comments: