Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 24 July 2015

முதுகலை ஆசிரியர் பணி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வில் வினாத்தாளின் குறியீட்டு எண்ணை குறிப்பிடாததால் நிராகரிக்கப்பட்டவரின் விடைத்தாளை மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பெரியகுளம் கள்ளிப்பட்டி வெள்ளிசுப்பையன் தாக்கல் செய்த மனு:ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)சார்பில் முதுகலை பட்டதாரி (வரலாறு) ஆசிரியர் பணி நியமனத் தேர்வு ஜன.,10 ல் நடந்தது. வினாத்தாளின் வரிசை குறியீட்டு எண் விபரத்தை குறிப்பிடவில்லை எனக்கூறி எனது விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை.

மதிப்பீடு செய்யக்கோரி டி.ஆர்.பி.தலைவரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை இல்லை. விடைத்தாளை மதிப்பீடு செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.டி.ஆர்.பி.,பதில் மனு: விடைத்தாளில் (ஓ.எம்.ஆர்.,)வினாத்தாளின் குறியீட்டு எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். தேர்வில் ஏபிசிடிவகை வினாத்தாள்கள் வினியோகிக்கப்பட்டது.
அனைத்திலும் 150 வினாக்கள் இருந்தாலும்வகைகளைப் பொறுத்து ஒவ்வொன்றிலும் வினாக்களின் வரிசை எண் இடம்மாறியிருக்கும். அதனடிப்படையில் வினாக்களுக்குரிய விடைச்சுருக்கம்
(கீ ஆன்சர்) இடம் பெற்றிருக்கும். மின்னணு முறையில் ஓ.எம்.ஆர்.சீட் மதிப்பீடு செய்யப்படுகிறது. விபரங்களை சரியாக பூர்த்தி செய்யாவிடில் விடைத்தாள்கள் நிராகரிக்கப்படும். மனுதாரர் குறியீட்டு எண்ணை குறிப்பிடாததால் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டது.
நீதிபதி
டி.ஆர்.பி.,கூறுவது ஏற்புடையதே. மனுதாரரின் குறைபாடு சரிசெய்யக்கூடியதுதான். இதையே விடைத்தாளை மதிப்பீடு செய்யாததற்கு காரணமாக கூறுவதை ஏற்க முடியாது. தவறு மனித இயல்பே.
தவறு செய்பவன்தான் மனிதன். மனுதாரர் தகுதியானவராக இருக்கும்பட்சத்தில் கற்பித்தல் தொழிலுக்கு இழப்பு ஏற்படும். விடைத்தாளை மதிப்பீடு செய்வது தவறில்லை. 
பணி நியமனம் முடிந்துவிட்டது. மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டால்ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்என டி.ஆர்.பி.,கூறுகிறது. விடைத்தாளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
மனுதாரர் தகுதியானவராக இருந்து தேர்ச்சி பெறும் பட்சத்தில்காலி இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் ஏ.வேலன் ஆஜரானார்.

No comments: