Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 9 June 2014

பிளஸ் 2: கடந்த ஆண்டை விட 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக வேலைவாய்ப்புக்கு பதிவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 50 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் கூடுதலாக வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துள்ளனர்.
பிளஸ் 2 முடித்த 5.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு வேலைவாய்ப்புக்காக ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 21 முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அன்றைய தினத்திலிருந்து மாணவர்கள் பள்ளிகளின் மூலமாகவே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்தனர்.
மே 30-ஆம் தேதி வரை பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. பிறகு, பதிவு செய்யும் தேதி ஜூன் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த தேதிக்குள் பதிவு செய்த அனைவருக்கும் ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வேலைவாய்ப்புக்காக 5 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்தனர்.

No comments: