குரூப்-2ஏ தேர்வு வருகிற மே மாதம் 18 ஆம் தேதியன்று
வெளியிடப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு ஜனவரி 3வது வாரத்தில்
வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர்
நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2014-15ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு பட்டியலை செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:
1,181 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-2ஏ தேர்வு வரும் மே மாதம் 18 ஆம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பு இந்த மாதம் 3வது வாரத்தில் வெளியிடப்படும்.
அதேபோல், 2,342 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு நடப்பு ஆண்டில் கூடுதல் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
மேலும், ஏற்கனவே நடந்து முடிந்த குரூப்-4 தேர்வு முடிவு இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறினார்.

No comments:
Post a Comment