Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 8 December 2013

பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகளில் சேருவதற்கான IBPS தகுதித் தேர்வு அறவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப இந்திய வங்கி பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் பொது எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான  அறிவிப்பை IBPS அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
IBPS தேர்வில் பங்கு பெறும் வங்கிகள்:
Allahabad Bank, Andhra Bank, Bank of Baroda, Bank of India, Bank of Maharashtra, Canara Bank, Central Bank of India, Corporation Bank, Dena Bank, Syndicate Bank, ECGC, UCO Bank, IDBI Bank, Union Bank of India, Indian Bank, United Bank of India, Indian Overseas Bank, Vijaya Bank, Oriental Bank of Commerce, Any other Bank, Financial Institution, Punjab National Bank, Punjab & Sind Bank.
பணி: I.T. Officer (Scale-I)
கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், தகவல் தொழிற்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ்  & இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Agricultural Field Office (Scale-I)
கல்வித்தகுதி: Agriculture/ Horticulture/Pisiculture, Animal Husbantry, Veterinary Science, Dairy Science, Agri.Engineering, Fishery Science, Agrimarketing &Co-Operation, Co-operation & Banking, Agri, Forestry போன்ற துறைகளில் 4 வருட பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


பணி: Rajbhasha Adhikari (Scale-I)
கல்வித்தகுதி: இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இந்தி முதன்மை பாடமாக இருந்தால்


ஆங்கிலம் துணைப்பாடமாகவும், ஆங்கிலம் முதன்மை பாடமாக இருந்தால் இந்தி துணைப்பாடமாகவும் இருக்க வேண்டும்.
பணி: Law Officer (Scale -I)
கல்வித்தகுதி: சட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று, இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.


பணி: HR/Personnel Officer (Scale-I)
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Personnel Management/ Industrial Relations/ HR/Social Work/Labour Law போன்ற துறைகளில் முதுநிலை பட்டம் அல்லது முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


பணி: Marketing Officer (Scale-I)
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் சந்தையியல் பிரிவில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சந்தையியல் துறையில் இரண்டு வருட PGDBA/PGDBM படிப்பை முடித்திருக்க வேண்டும்.


பணி: I.T.Officer (Scale-II)
கல்வித்தகுதி: Computer Science, Computer Applications/Information Technology/Electronics/Electronics & Tele Communications/ Electronics & Communication/ Electronics & Instrumentation போன்ற பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்று IT துறையில் இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Law Officer (Scale-II)
கல்வித்தகுதி: LLB முடித்து இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும். நீதிமன்றங்களில் 3 வருட வழக்கறிஞராக பணியாற்றிருக்க வேண்டும் அல்லது பொதுத்துறை வங்கிகளில் சட்ட ஆலோசகராக இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Chartered Accountant (Scale-II)
கல்வித்தகுதி: CA முடித்தி்ருக்க வேண்டும்.
பணி: Manager Credit (Scale-II), Finanace Excutive (Scael-II)
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் CFA/ICWA  முடித்திருக்க வேண்டும் அல்லது MBA முடித்திருக்க வேண்டும் அல்லது PGDBM முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பானது 01.11.2013 தேதிப்படி Scale-I -க்குரிய அதிகாரி பணிக்கு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
Scale-II-க்குரிய அதிகாரி பணிக்கு 20 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் கணினி வழி எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 08.02.2014 மற்றும் 09.02.2014
தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: பிப்ரவரி 2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் 2014
எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை 28.01.2014க்கு பிறகு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments: