Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 5 December 2013

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - சி.பி.எஸ்.இ. முடிவு

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளுக்கு, பள்ளி வேலை நாட்களை 2015ம் ஆண்டு முதல் 6 நாட்களாக அதிகரிப்பது என்ற முடிவை சி.பி.எஸ்.இ. மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறியதாவது: கல்வி உரிமை சட்டத்தின் பரிந்துரைப்படி, ஒரு பள்ளி, ஒரு வாரத்திற்கு 45 மணி நேரங்கள் செயல்பட வேண்டும். இதன்படி, வாரத்திற்கு 6 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 6 மணிநேரம் 10 நிமிடங்கள் செயல்பட வேண்டியுள்ளது.
பள்ளி வேலைநேரம் முடிந்த பிறகும், ஒரு ஆசிரியரை கூடுதலாக 1.20 மணிநேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நேரத்தில் திட்டமிடுதல், தயாராதல், சரிபார்த்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.
அதேசமயம், ஒரு ஆண்டிற்கு 1200 மணிநேரங்களுக்கும் மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, தேவையான கூடுதல் ஊதியம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு 6 நாட்கள் பணி என்ற இந்த திட்டத்தில், சாதக மற்றும் பாதக அம்சங்கள் கலந்தே உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments: