தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தற்போதைய நிலையில் 142 தபால்காரர் பணியிடங்களும் ஒரு மெயில் கார்டு பணியிடமும் காலியாக உள்ளதாகவும், இந்த பணிகளுக்கு ஊழியர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அஞ்சலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் ஆகும். பொதுப் பிரிவினருக்கு 18 வயது முதல் 27 வரையும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும் என்றும் வயது வரம்பு 04.10.2015 தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் என்றும் அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க பதிவு கட்டணம் ரூ. 100 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ. 400 செலுத்த வேண்டும் என்றும் பெண் மற்றும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், உடல் ஊனமுற்றோருக்கு தேர்வு கட்டணத்தில் விதி விலக்கு அளிக்கப்படும் என்றும் அஞ்சல்துறை அறிவித்துள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.dopchennai.in என்ற இணையதளத்தில் சென்று வரும் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடியவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியில் சேர்ந்த மூன்றரை ஆண்டு பணி நிறைவுக்கு பின் அஞ்சலக- பிரிப்பக எழுத்தர், பதவி உயர்வுக்கான இலாகா தேர்வுக்கு தகுதி உடையவர் ஆவார். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தபால் காரர், மெயில் கார்டு பணிக்கு விண்ணப்பித்து அரசு ஊழியர் ஆவது மட்டுமின்றி மக்கள் சேவை செய்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று தமிழ்நாடு வட்டம் முதன்மை அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment