சித்த மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெற புதன்கிழமை (ஜூலை 30) கடைசி நாளாகும்.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் அனுமதியும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும் ஒரு சேர பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதுவரை 3,525 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 2500 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரசினர் இந்திய மருத்துவமனை மற்றும் இயக்குநரகத்திற்கு சென்று சேர்ந்துள்ளன. ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். ஜூலை 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூறியது:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டும். 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் அரசினர் இந்திய மருத்துவமனை மற்றும் இயக்குநரகத்திற்கு வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. கடைசி நாளுக்கு முன்பாகவே அனுப்பப்ட்டு அஞ்சல் துறை அல்லது கொரியர் நிறுவனத்தின் தாமதத்தினால் வரும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment