திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த வேலையில்லா இளைஞர்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்புவோர் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த, வேலையில்லா இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2014-15-ம் நிதியாண்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடன் பெற்று பயன்பெற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தகுதியான இளைஞர்கள் திருவண்ணாமலை, மாந்தோப்பில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகிப் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04175-254849 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment