சென்னையிலுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் அளிக்கப்படும் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் தொழிலாளர் ஆய்வாளர் சே.அப்துல்அஜீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் எம்ஏ (தொழிலாளர் மேலாண்மை), தொழிலாளர் நிர்வாகத்தில் ஓராண்டு பகுதிநேர முதுகலை பட்டப்படிப்பு (பிஜிடிஎல்ஏ), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (டிஎல்எல் மற்றும் ஏஎல்) குறித்த ஓராண்டு வார இறுதி பட்டயப்படிப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவற்ற நிலையில் சென்னை பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுககள் வெளியாகாததால் பல மாணவர்கள், பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தொழிலாளர் கல்வி நிலைய படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை ரூ.200 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். எஸ்ஸி, எஸ்டி பிரிவினர் சாதிச்சான்றிதழ் நகலை தாக்கல் செய்து ரூ.100க்கு விண்ணப்பங்களை பெறலாம். தபாலில் பெற விரும்புவோர் விண்ணப்பக் கட்டணத்துடன் ரூ.50 கூடுதலாக வங்கி வரைவோலையை இயக்குநர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், சென்னை -5 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98411 92332, 98841 59410 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment