Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 23 June 2014

அண்ணாமலைப் பல்கலை. கலந்தாய்விற்கு 1692 மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துுவம் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்விற்கு தரவரிசை அடிப்படையில்  1692 மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS), பல்மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு பல்கலைக்கழக நி்ர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெறவுளஅளது. 150 எம்பிபிஎஸ் இடங்கள், 100 பிடிஎஸ் இடங்களுக்கு மொத்தம் 7421 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் தரவரிசை (Rank List) அடிப்படையில் கலந்தாய்விற்கு மொத்தம் 1692 மாணவ, மாணவியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொதுப்பிரிவினர் (OC)- 115, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) -1063, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) (BCM)- 69, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)- 269, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 133, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SCA) (அருந்ததியினர்)- 21, பழங்குடியினர் (ST)- 13, மாற்றுத் திறனாளிகள் (Differentaly Abled Candidates)- 9 பேர் ஆவர்.

சேர்க்கைக்கான இடங்களை நிரப்ப போதுமான அளவில் அனைத்து பிரிவினரைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். BC, BCM, MBC/DNC, SC, SCA ST ஆகிய இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு கூடுதலாக அவர்களின் தரவரிசை அடிப்படையில் பொதுப்பிரிவிலும் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். எந்த ஒரு இடஒதுக்கீடு பிரிவைச் சார்ந்த இடம் காலியாக இருந்தாலும், அந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களை கொண்டே இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்படும்.

மருத்துவக்கல்வி இயக்ககம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்படும் அதே விதிமுறைகள் அண்ணாமலைப் பல்கலை. கலந்தாய்வில் பின்பற்றப்படும். மாணவர் சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு விதிமுறையை பின்பற்றியே நடைபெறும்.

கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் (Call Letter) மாணவர்களுக்கு விரைவு அஞ்சல் (Speed Post) மூலம் தேதி மற்றும் நேரம் ஆகிய விபரம் குறுந்தகவல் (SMS) மூலமும் அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு கடிதத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் www.annamalaiuniversity.ac.inபதவிறக்கம் (Download) செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: