புதுவைப் பல்கலைக்கழகத்தில், பிஇ, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு தேதி ஜூன் 24ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 20ம் தேதி நடைபெறும் என்று புதுவைப் பல்கலைக்கழகம் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி தற்போது ஜூன் 24ம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏற்கெனவே அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளை நடைபெற உள்ள கலந்தாய்வில் குறித்த நேரத்தில் மாணவர்கள் பங்கேற்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment