டிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் www.tndte.com இணையதளத்தில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பழைய மதிப்பெண் சான்றிதழை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கணினி மையத்தில் சமர்ப்பித்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறு வரும் மாணவர்கள் அவர்களுடைய கல்லூரி முதல்வரிடமிருந்து, மதிப்பெண் சான்றிதழை நேரடியாகப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதிக் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என இயக்கக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment