சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பணம் கையாடல் உள்ளிட்ட புகார்களின் காரணமாக இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment