பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வராததால் வியாழக்கிழமை (இன்று) வெளியாகவிருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலை 14-ம் தேதி வெளியிட மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சென்னையில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. மேலும் 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் 2014-15ம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண் ணப்ப விநியோகம் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 30,380 விண்ணப்பங்கள் விற்பனையானது. 28,053 விண் ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டதில், 146 விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 27,907 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ரேண்டம் எண், சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, 12-ம் தேதி (இன்று) தரவரிசைப் பட்டியல் வெளியிடப் படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது தரவரிசை பட்டியல் வரும் 14-ம் தேதிதான் வெளியிடப்படும் என டிஎம்இ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎம்இ அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 2 மாணவர்கள் பலர் மறுகூட்டல் மற்றும் மறுமதிப் பீட்டுக்கு விண்ணப்பித் துள்ளனர். அந்த முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் 12-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த தரவரிசைப் பட்டியல், 14-ம் தேதி வெளியிடப்படும்.
திட்டமிட்டபடி முதல்கட்ட கவுன்சலிங்கை வரும் 18-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பார். 25-ம் தேதி வரை கவுன்சலிங் நடக்கும். இரண்டாம் கட்ட கவுன்சலிங் 27-ம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.
ஆகஸ்ட் 3-ம் தேதி மூன்றாம் கட்ட கவுன்சலிங் நடக்கும். சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment