Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 12 June 2014

பொறியியல் படிப்பு ரேண்டம் எண் வெளியீடு; 16-ல் தேதி ரேங்க் பட்டியல்

பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்த ஒரு லட்சத்துக்கு 73 ஆயி ரத்து 687 மாணவர்களுக்கும் கணினி மூலம் புதன்கிழமை ரேண்டம் எண் வழங்கப்பட்டது. மாணவர்களுக் கான ரேங்க் பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 12 ஆயிரத்து 374 மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை வாங்கினர். அவர்களில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 687 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாண வர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கப் படுவது வழக்கம். ரேண்டம் எண் என்பது கணினி மூலம் ஒதுக்கப் படும் 10 இலக்க எண் ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் பட்சத்தில் கடைசி வாய்ப்பாக ரேண்டம் எண் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர் களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை கிண்டி யில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கணினியில் என்டர் பட்டனை அழுத்த ஒரு நொடியில் ஒரு லட்சத்துக்கு 73 ஆயிரத்து 687 மாணவர்களுக்கும் ரேண்டம் எண் வழங்கப்பட்டது.
மாணவர்கள் தங்கள் விண்ணப் பத்தின் எண்ணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) பதிவுசெய்து ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.
விளையாட்டு பிரிவில் 4,852 பேரும், மாற்றுத்திறனாளிகள் 488 பேரும், முன்னாள் ராணுவத் தினரின் வாரிசுகள் 2,518 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 92,731 பேர் முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்கள் ஆவர். அவர்களுக் கான டியூஷன் கட்டணத்தை அரசே செலுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா, கூடுதல் செயலா ளர் ஜெ.உமா மகேஸ்வரி, தொழில் நுட்பக்கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம்.ராஜா ராம், பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக் கான ரேங்க் பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. கல்லூரி மற்றும் பாடப்பிரிவைத் தேர்வுசெய் வதற்கான கவுன்சிலிங் 23-ம் தேதி தொடங்குகிறது.

No comments: