Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 22 May 2014

இன்றைய தினத்தின் சிறப்புகள் (மே 22)

ஷெர்ஷா சூரி நினைவு நாள்
ஐந்தே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், அரசு மற்றும் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என உலகிற்கு உணர்த்திய பஷ்தூன் அரசர் ஷெர்ஷா சூரி 1545 ஆம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார்.

ஹூமாயூனின் ஆட்சிக்காலத்திற்கும்ம் அக்பரின் ஆட்சிக்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வட இந்தியாவை ஆண்ட ஷெர்ஷா சூரி, முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் ஆட்சிக் காலத்தில் தனியார் படைப்பிரிவில் சாதாரண வீரனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர். ரூபாயும்ம் நிலப்பட்டா முறையும் இந்தியாவில் அறிமுகமானது இவரது ஆட்சிக்காலத்தில்தான், கிராண்ட் டிரங்க் ரோடு எனப்படும் பெரும் தலைநெடுஞ்சாலையை விரிவுபடுத்தியது, சராய் எனப்படும் வழிப்போக்கர் தங்குவதற்கான ஓய்விடங்கள் அமைத்தது, ராணுவத்தையும், அரசு நிர்வாகத்தையும் பிரித்து ஆட்சியை தெளிவான வரையறைக்குள் கொண்டு வந்தது என பல்வேறு சாதனைகளைப் படைத்தது ஷெர்ஷாவின் ஆட்சிக்காலம்.
பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தில், ஹூமாயூனின் படையெடுப்பைத் தடுப்பதற்காக இவர் கட்டிய ரோட்டாஸ் கோட்டை, யூனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, வரலாற்றுப் பக்கங்களில் ஷெர்ஷாவின் பெயரைப் பதிவு செய்து கம்பீரமாக நிற்கிறது.
விமானத்திற்கு காப்புரிமை பெற்ற நாள்
சிறு வயது முதலே விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்துக் கொள்ளாமல் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, அதில் வெற்றி பெற்றவர்கள் அமெரிக்க கண்டுபிடிப்பாளர்களான ரைட் சகோதரர்கள். அந்த ஆராய்ச்சியின் பலனாக, 1903-ம் ஆண்டு, 12 வினாடிகள் ஆகாயத்தில் பறந்து, வில்பர் ரைட்டும் ஓர்வில் ரைட்டும் சாதனை படைத்தனர். விமானக் கண்டுபிடிப்பிற்காக, தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த ரைட் சகோதரர்கள், தாங்கள் கண்டுபிடித்த விமானத்திற்கு 1906-ம் ஆண்டு இதே நாளில்தான் காப்புரிமை பெற்றனர்.

No comments: