12-ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதமாக வெளியிடப்படுவதால், பொறியியல் கலந்தாய்வு பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மதிப்பெண் சி.டி.யை அண்ணா பல்கலைக்கழகத்திடம் நேரடியாக ஒப்படைக்க சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் தேர்வெழுதிய பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு மே 9-ம் தேதி வெளியிடப்பட்டது. அவர்கள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழை வைத்தே பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கவும், அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழை (டி.சி.) கலந் தாய்வின்போது சமர்ப்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகாத நிலை யில், அந்த மாணவர்கள் மதிப் பெண் விவரம் எதுவும் இல்லாமலே விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு முடிவு வெளியான பின்னர் மதிப்பெண் சான்றிதழை சமர்ப் பித்துக்கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்
இதற்கிடையே, பொறியியல் படிப் புக்கு விண்ணப்பங்கள் வழங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் கடைசி தேதி மே 27-ம் தேதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. மாநில பாடத்திட்ட பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 25 முதல் 28-ம் தேதிக்குள் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டுதோறும் பொறியியல் படிப் புக்கு ஏறத்தாழ 5 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்ப தற்கு முன்னரே அவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகிவிடும். இதனால், அவர்களும் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்துவிடுவர்.
மதிப்பெண் ஆய்வு பணி
ஆனால், இந்த ஆண்டு இன்னும் தேர்வு முடிவே வெளியாகாத நிலையில், ஒருவேளை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியான மே 27-ம்தேதிக்குள் முடிவு வந்தாலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஆகலாம். மாணவர்கள் சமர்ப்பிக்கும் மதிப்பெண் சான்றிதழ் உண்மையானது தானா என்பதையும் அண்ணா பல்கலைக்கழகம் ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னரே ஆய்வுசெய்ய வேண்டும்.
மாநில பாடத்திட்ட மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் சி.டி.யை தேர்வு முடிவு வெளியான உடனேயே அண்ணா பல்கலைக்கழகத்திடம் அரசு தேர்வுத்துறை வழங்கிவிட்டது. எனவே, அந்த சி.டி.யைப் பயன்படுத்தி மதிப் பெண் விவரங்களை நொடியில் ஆய்வுசெய்துவிடலாம்.
அண்ணா பல்கலை.யிடம் நேரில் சி.டி.
தற்போது, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதமாக வெளி யாகும் நிலையில், தமிழக அரசு தேர்வுத்துறையைப் போன்று சிபி எஸ்இ-யும் தேர்வு முடிவு சி.டி.யை வழங்குமாறு அண்ணா பல்கலைக் கழகம் கோரியிருந்தது. வழக்கமாக சிபிஎஸ்சி இதுபோன்று தேர்வு முடிவு சி.டி.யை வழங்குவது இல்லை.
இருப்பினும், தேர்வு முடிவு தாமதம் காரணமாக, பொறியியல் கலந்தாய்வு பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தேர்வு முடிவு சி.டி. வழங்க சிபிஎஸ்இ முன்வந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக அதிகா ரிகள் தெரிவித்தனர். தேர்வு முடிவு சி.டி. கிடைக்கும் பட்சத்தில் சிபிஎஸ்இ மாணவர்களின் மதிப் பெண் விவரங்களை அண்ணா பல் கலைக்கழகம் விரைந்து ஆய்வு செய் திட முடியும்.
No comments:
Post a Comment