தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அன்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், இவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
மே 26 முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு மே 26 முதல் 31 வரை பள்ளிகள் மூலமாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் மறுகூட்டல் கட்டணம் ரூ.305. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தை மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதும் மையங்களிலும் செலுத்த வேண்டும். 10-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படும்.
இந்தத் தேர்வுக்கு மே 26 முதல் 30 வரை பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125. பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment