பிளஸ் 2 தேர்வு முடிவைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதமும் 90ஐ தாண்டலாம் என கல்வித்துறை வட்டாரம் எதிர்பார்க்கிறது.
கடந்த 1980ல் நடந்த முதல் பிளஸ் 2 பொதுதேர்வில் இருந்து, கடந்த ஆண்டு வெளியான தேர்வு முடிவு வரை ஒரு ஆண்டு கூட தேர்ச்சி சதவீதம் 90ஐ எட்டியதில்லை.
ஆனால் முதல்முறையாக கடந்த 9ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், 90.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல், பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 90 சதவீதத்தை தாண்டும் என கல்வித் துறை வட்டாரம் எதிர்பார்க்கிறது.
கடந்த 2012ல் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 86.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 2013ல் 89 சதவீதமாக அதிகரித்தது. கடந்த ஆண்டு 2.8 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். எனவே வரும் 23ம் தேதி வெளியாகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வை 10.34 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்; 3100 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
No comments:
Post a Comment