பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் பிறந்த தினம் இன்று. 1749-ல் இங்கிலாந்தின் பெர்கெலி என்னுமிடத்தில் பிறந்த ஜென்னர், மருத்துவப் பட்டம் பெற்றவர். பெரியம்மை நோயை ஏற்படுத்தும் வைரோலா கிருமியால் பலரும் உயிரிழப்பதைக் கண்ட ஜென்னர், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார். அதன் பலனாக, 1796-ம் ஆண்டு ஜேம்ஸ் பிப்ஸ் என்ற சிறுவனுக்கு தடுப்பூசி போட்டு அம்மை நோய் வராமல் தடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். பெரியம்மை நோய் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க காரணமாய் இருந்த எட்வர்ட் ஜென்னர் பிறந்த தினம் இன்று.
வெள்ளி கோள் ஆராய்ச்சி
வெள்ளி கோளை ஆராய்வதற்காக ரஷ்யா அனுப்பிய வெனேரா 6 விண்கலம் தனது கடைசி தகவலை அனுப்பிய தினம் இன்று.
வெனேரா என்றால் ரஷ்ய மொழியில் வெள்ளி என்று பொருள். வெள்ளியை ஆராய 1961 முதல் 1984 வரை பல்வேறு வெனேரா விண்கலங்களை ரஷ்யா அனுப்பியது. அவற்றில் வெனேரா 6 விண்கலம் வெள்ளி கோளின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் வெடித்துச் சிதறியது. இருந்தபோதும், வெனேரா 6 கடைசியாக சில தகவல்களை பூமிக்கு அனுப்பியது. அத்தகவல்களே, வெனேரா 7 விண்கலம், வேறொரு கோளில் வெற்றிகரமாக தரையிரங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையைப் படைக்கக் காரணமாய் அமைந்தது.
No comments:
Post a Comment