Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 13 March 2014

SSLC: 10-ஆம் வகுப்பு தேர்வு: தனித் தேர்வர்கள் 14, 15-இல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் வரும் 14, 15-ஆம் தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 SSLC - MAR / APRIL - 2014 - TATKAL PRIVATE CANDIDATE INSTRUCTION - PRESS RELEASE
 SSLC - MAR / APRIL - 2014 - TATKAL PRIVATE CANDIDATE - NODAL CENTRE LIST 


இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
10-ஆம் வகுப்பு தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர் எந்த மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறாரோ, அந்த மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு மையத்துக்கு வரும் 14, 15-ஆம் தேதிகளில் நேரில் செல்ல வேண்டும்.
இந்த சிறப்பு மையங்களின் விவரத்தை www.tndge.in என்ற இணையதளத்திலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
அறிவியல் தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றதற்கான ஆதாரத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தனித் தேர்வர்கள் ரூ.125 தேர்வுக் கட்டணத்தோடு, சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500ம், ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50ம் என மொத்தம் ரூ.675-ஐ, சிறப்பு மையத்தில் மட்டுமே செலுத்த வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள்? ஏற்கெனவே பத்தாம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்ச்சி பெறாத மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.  அறிவியல் தேர்வு எழுதுவோர் அறிவியல் பாட செய்முறை வகுப்பில் கலந்து கொண்டதற்கான, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற சான்றை இணைத்தல் வேண்டும்.
முதல்முறையாக நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர் பள்ளியின் அசல் மாற்றுச் சான்றிதழ் அல்லது அசல் 8-ஆம் வகுப்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments: