இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாநகராட்சி ஆணையர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
மக்களவைத் தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தேர்தலுக்கென பிரத்யேக இணைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வழியாக வாக்குப்பதிவை பதிவு செய்யும் பணிக்கும் வர விரும்பும் கல்லூரி மாணவர்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தின் பிரத்யேக இணைப்பில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்தும் மாநகராட்சியின் கணினி மையத்தில் அளிக்கலாம்.
அரசு அளித்த இலவச மடிக்கணினிகளை இந்த பணிக்கு பயன்படுத்த முடியாது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Students Volunteers |
Online Registration |
No comments:
Post a Comment