Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 11 March 2014

தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

கிண்டியில் உள்ள இந்திய அரசின் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி மையம் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த முகாமில், பாக்கு மட்டைத் தட்டுகள், காகித பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிப்பது குறித்து காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மேலும், சிறு ரசாயனப் பொருள்களான சோப்பு ஆயில், குளியல் சோப், பினாயில் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சிகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகின்றன. தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் பற்றிய விவரங்கள் உள்ளிட்டவையும் இப்பயிற்சியின்போது வழங்கப்படுகின்றன.
பயிற்சியில் கலந்து கொள்ள கல்வித் தகுதி கட்டாயமில்லை. 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணச் சலுகை உண்டு. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த முகாம் 14-ஆம் தேதி நிறைவடைகிறது.
இது குறித்த மேலும் தகவல்களுக்கு 9940318891, 9790754446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: