அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் 5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை NEST-2014 தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய அளவில் நடத்தப்படும் National Entrance Screening Test (NEST) -2014 அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வழங்கப்படும் படிப்பு: ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பு (5 வருடங்கள்)
பாடப்பிரிவுகள்: உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல்
படிப்பு நடைபெறும் இடங்கள்:
National Institute of Science Education & Research, Bhubaneswar
Mumbai University, Centre for Excellence in Basic Sciences, Mumbai
தேர்வு நடைபெறும் நாள்: 31.5.2014
NISER மற்றும் UM-DAE CBS-ன் படிப்பில் சேரும் தகுதியான மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையினால் வழங்கப்படும் இன்ஸ்பையர் உதவித்தொகை வருடத்திற்கு ரூ.60,000 மற்றும் கூடுதலாக வருடத்திற்கு ரூ.20,000 கோடைகால பணிக்கான தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.nestexam.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 8.3.2014
No comments:
Post a Comment