Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 4 January 2014

D.T.Ed. ஆசிரியர் பட்டயத் தேர்வு முடிவுகள் ஜனவரி 6-ல் வெளியீடு

ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் திங்கள்கிழமை (ஜன.6) அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட உள்ளன.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பட்டயத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் பயின்ற சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்வுகளை எழுதியதால், தனியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. மாணவர்களுக்கு நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
மதிப்பெண் சான்றிதழைப் பெறும்போதே மாணவர்கள் ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்ரவரிக்குள் பதிவு செய்ய வேண்டும்: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் பட்டயத் தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வு தொடர்பாக மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் விவரங்களை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும், மாணவர்களின் விவரங்களைத் தவறில்லாமல் பதிவு செய்வதோடு, பதிவு செய்தப் பிறகு தகவல்களை பலமுறை சரிபார்க்க வேண்டும் என ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

1 comment:

Unknown said...

Dear sir Please upload 2 GO's 1.Tamil Pundit Training = to B.Ed 2.Special B.Ed = to B.Ed Please both GO's upload sir.it's my humble request. By Sathiya-Tiruttani