உயர் ஆராய்ச்சிப் படிப்பு உதவித் தொகை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
ஆராய்ச்சிப் படிப்பை முடித்து அதே துறையில் உயர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள 100 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
நிபுணர் குழு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க பிப்ரவரி 21 கடைசித் தேதி. மேலும் விவரங்களை www.ugc.ac.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
எவ்வளவு தொகை?: உயர் ஆராய்ச்சி படிப்பு உதவித் தொகை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். முன்னர் ஐந்து ஆண்டுகளுக்கும் மாதம் ரூ. 16,000 என்ற அளவில் வழங்கப்பட்டது.
மேலும், உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட தற்செயல் செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ. 30,000-மும் வழங்கப்பட்டு வந்தது.
இப்போது இந்த உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000-மும், அடுத்த மூன்றாவது ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 30,000 என்றும் வழங்கப்பட உள்ளது. மேலும், தற்செயல் செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என யூஜிசி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment