கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் செல்ஃபோன் மூலம் கல்வி கற்பிக்கும் முறையை வோடஃபோன் அறிமுகப்படுத்த உள்ளது. வெப் பாக்ஸ் என்ற பெயரிலான இந்த தொழில்நுட்ப முறை மூலம் ஆசிரியர் பாடம் நடத்துவது மொபைல் ஃபோனில் ஒளிபரப்பாகும். இதை தொலைக்காட்சியில் இணைத்து எல்லா மாணவர்களும் பார்க்க முடியும். அந்தந்த மாநில அரசுகளின் பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே கல்வி கற்பித்தல் இருக்கும் என்று வோடஃபோன் இந்தியா உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பையை சேர்ந்த பிரதம் ஃபவுண்டேஷன் எனும் அமைப்புடன் இணைந்து 12 மாநிலங்களில் கல்விச் சேவையை தர வோடஃபோன் திட்டமிட்டுள்ளது. தொலைதூர கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தர உதவும் இந்த முறை, சிறந்த வணிக வாய்ப்பாகவும் இருக்கும் என வோடஃபோன் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment